
மரம் வளர்ப்பு குறித்த சிந்தனைகள் பல...
ஒவ்வொரு வருக்கும் அவரவர்
செயலுக்கு ஏற்ப சிந்தனைகள் மாறுபடும், வலுப்படும்.
ஆனால் அனைவரின் ஒரு
மித்த சிந்தனையின் நோக்கம் மரம் வளர்ர்ப்பு.
மரம் வளர்ப்பின் அவசியத்தினை
அரசு அமைப்புகளும்,அரசு சார அமைப்புகளும் சொல்லிக்கொண்டுதான்
இருக்கின்றன.
ஆனால்.... இந்த வார்த்தைகள் மதிக்கப் பட்டு செயல் வடிவம்
பெறுகிறதா?
இல்லை...
ஏன்?
ஆம் அரசு அமைப்புகள் மற்றும் அரசு சார
அமைப்புகள் பெரும்பாலும் ஏட்டளவில் தங்கள் பெயர் இடம் பெறவே இது போன்ற
செயல்களை முன்னெடுத்துச் செல்கின்றன,
ஏன் இந்த நிலை... ?
வரும் மடல்களில்
நான் உங்களுக்கு தெளிவாக சொல்லுகிறேன். அமைச்சர் நட்டிய மரக்கன்று 1000
வருடங்கள் ஆனாலும் ஆழியாது மரக்கன்று அல்ல....
அமைச்சர் நட்டிய மரக்கன்று
எனும் செய்தி மட்டும்...
அரசின் செய்தி ஏட்டில் இருந்து மறையாது. இப்படி
தான் இன்று அரசின் செயல் திட்டங்கள்...
நாம் இங்கே அரசினை சாடுவது நம்
நோக்கம அல்ல... நாம் அரசிடம் எப்படி எல்லாம் ஏமாறுகிறோம்... மர
வளப்பிற்கு அரசு கவனம் செலுத்தினால் பசுமை தமிழகம் காணமுடியாதா?
வேண்டாம்...
நாம் இனி எந்த அரசிடமும் ஏமற வேண்டாம்... நாம் தான் அரசு
என்பதனை உணர்த்துவோம் அரசாளும் நபர்களுக்கு....
வாருங்கள் நம் செயலினை முழு வடிவம் கொண்டு
வருவோம்.
நீங்கள் மரம் வளர்க்க விரும்புகிறீர்களா..
இது எனக்காக அல்ல... ...
அதே போல உங்களுக்காக அல்ல.... நாம் வாழும்
இந்த உலக நலனுக்காக எனும் சிந்தையில் ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம்
வாருங்கள்...

No comments:
Post a Comment